Saturday, April 7, 2007

ஆசைகள்.........
அனைவருக்கும் பொதுவானது
விருப்பங்களால் வேறுபடினும்
விளைவுகள் என்றுமே ஒன்றாகவே
வீண் ஆசை என்றறிந்தாலும்
விரும்பும் வினோத மனங்கள்....

அடங்காத ஆசையால்
அழிவில் பயணித்தாலும்
தீரா ஆசை ஏனோ
தீபந்தமாய் எரியும் உள்ளுக்குள்!

முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்...

2 comments:

சென்ஷி said...

//முடிகிறதோ இல்லையோ
முயன்று பார்க்க எத்தனிக்கும்
ஏமாற்றங்கள் எதிர்வருகையில்
ஏக்கங்களாய் தங்கிப்போகும்
எண்ணற்ற சில ஆசைகள்... //

குங்குமம் ஸ்டைல்ல சொல்லனும்னா சும்மா நச்சுன்னு இருக்கு :))

சென்ஷி

மஞ்சூர் ராசா said...

ஆமாம்.

ஆசைகளை அழிக்க முடியுமா?

நல்லதொரு முயற்சி.

வாழ்த்துக்கள்