எட்டா தூரத்தில் நீ இருந்தாலும்
எட்டும் உன் குரலில் மகிழ்ந்து
என்னை மறக்கும் தருணத்தில்
ஒற்றையா இரட்டையா என்று
வினா தொடுத்து விதியின் பெயரில்
வெற்று சண்டை எய்கிறாய்..
என்னுள் நான் நொறுங்குவதை
உணராத காற்றாய்
கடந்து செல்கிறாய்..
என் முகத்தில் அறைந்த வண்ணம்...
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காற்றின் விதியும் அதனிடமில்லை பாவம்...
கடலும் மரங்களும் அதை இந்த பாடு படுத்துகிறது..
அதை அறியாதவளா இந்த கவிதை???
அன்புடன்
என் சுரேஷ்
Post a Comment