ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்...
வேகம் தாங்கிய பொழுதுகள்
பொருட்படுத்துவதில்லை எதையுமே
மறந்த பாவனையில்...
முடிவற்ற வரிகளென நீளும்
வாழ்வுதனில் ஒருவேளை மறக்கக்கூடுமோ?
நாளும் புதுப்பிக்கப்படும் நினைவுகள் மீறி!
நன்றி keetru.com
http://www.keetru.com/literature/poems/silvandu.php
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//ஒவ்வொரு பிராயங்களின் முடிவிலும்
குற்றவுணர்வின் பக்கங்கள் நிரப்பப்படுகின்றது
திருப்பவியலாத கனத்துடன்.//
நீண்ட நாட்களுக்கு பிறகு மிக நல்ல வரிகளுடன் தொடங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
Post a Comment