வரைமுறைகளும்
வரையரைகளும்
வரவேண்டாம்
நமக்குள்ளும்
நமது நட்புக்குள்ளும்...
இதுவென்றும்
அதுவென்றும்
பெயர் சூட்டவேண்டாம்
இன்னதென்றறியா
நமது பந்தத்திற்கு...
நாய் தூற்றும்
நரி தூற்றும்
என்று புதைக்க நினைத்தாலும்
முல்லையாய் சிரித்து
முழுவதுமாய் ஆக்ரமிக்கும்
நமது நட்பை
எங்கிட்டு அடைப்பது
என் மனம் மறக்கும் வண்ணம்?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அழகா சொல்லி இருக்கீங்க.
என்ன இப்ப சமீபமாக எதுவும் எழுதுவது இல்லையா?.
ஆளையேக் காணோம்.
-சுரேஷ்பாபு
சொல்ல முடியாதவைகளை சொல்லிடவே கவிதைகள்
Post a Comment