Sunday, February 4, 2007

பல நட்புகளை காணும் பொழுது
தவிர்க்க முடியாது தோன்றுகிறது
உன் முகம் என் மனதினுள்..

தபால் என்ற குரல் கேட்டால்
உன் கடிதமாய் இராதா என்ற
ஆதங்கம் உள்ளுக்குள்…

வழியில் காணும் கோவில்
எல்லாம் கவனமாய் பிரார்த்திக்கிறேன்
உனக்காகவே நெஞ்சுக்குள்…

பயணிக்கும் போதும், தனிமையிலும்
உன்னுடன் மட்டுமே பேசுகிறேன்
மானசீகமாக…

நிமிடத்தில்! நீ ஒரு முறையேனும்
நினைப்பாயா என்னை, என்ற
கேள்வி எனக்குள் !

இருப்பினும்…இமை முடி எடுத்து
ஊதுகிறேன் ஒரு முறையேனும்
உனைசந்திக்க வேண்டும் என்ற
வேண்டுகோளோடு…

3 comments:

மஞ்சூர் ராசா said...

அன்பு சில்வண்டுவை வலைப்பதிவுலகிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைக்கிறேன்.

சிறந்தப் பதிவுகளை படைத்து வெற்றியடைய வாழ்த்துக்கள்.

பாம்பாட்டிச் சித்தன் said...

வந்தனங்கள்,மனம் உவந்த வரவேழ்ப்பு.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
நல்லதோர் கவிதை வேண்டும்
என பராசக்தியிடம் இறைஞ்சுங்கள்.
கண்டிப்பாக கிடைக்கும்.

சில்வண்டு said...

வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணா.
நன்றி சித்தரே.. :)